என்றேனும் நீ மனம் திரும்பி வருவாய் அழைக்க விரும்பி என் எண் இடுவாய் உனக்கே உனக்கென்று நான் வாங்கி வைத்திருக்கும் அலைபேசி எண்ணில் அன்றுன் பெயர் ஒளிரும் அதுவரை என் அழைப்புக்குமின்றி பிறத்தியாருக்கும் ஈவதின்றி தொகையிட்டு மின்னேற்றி உயிரோடு வைத்திருப்பேன் இந்த எண்ணை. ~கவிஞர் மகுடேசுவரன்